கடந்த ஞாயிற்றுக் கிழமை(கார்த்திகை இரண்டாந் திகதி) கலாஜோதி விளையாட்டுக் கழக மைதானத்தில் தலா எட்டு பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட மென்பந்துச்சுற்றுப்போட்டி ஒன்றை கலாஜோதி விளையாட்டுக் கழகம் நடாத்தியது.இறுதி ஆட்டத்துக்கு தெரிவான இணுவில் இந்து விளையாட்டுக் கழகம் மற்றும் இளம்சிங்கம் விளையாட்டுக் கழகங்கள் மோதிக் கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய இளம்சிங்கம் அணி நிர்ணயித்த எட்டு பந்துப் பரிமாற்றங்களில் முப்பத்தி எட்டு ஓட்டங்களை எடுத்தது.முப்பத்தி ஒன்பது ஓட்டங்கள் எடுத்தால்வெற்றி என்ற இலகு இலக்குடன் களமிறங்கிய இணுவில் இந்து அணி ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து ஆறு பந்துப்பரிமாற்றத்தில் வெகு இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது.இவ்வெற்றிக்கு எமது கழக வீரரான தமிழரசனுடைய பங்களிப்பே மிக முக்கியமானது.அவர் தனது முதலாவது பந்துப்பரிமாற்றத்தின் போது எதிரணியின் மூன்று விக்கட்டுக்களை பதம் பார்த்ததோடு மட்டும் இல்லாமல், ஆட்டமிழக்காது கடைசிவரை துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றார்.

0 Comments:

Post a Comment